163
அமெரிக்க கடேட் வீரர்கள் இலங்கையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க கடேட் பிரிவைச் சேர்ந்த 33 படைவீரர்கள் இவ்வாறு இலங்கையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயுத பயன்பாடு, உடல் பயிற்சி மற்றும் களப் பயிற்சி போன்றன இந்த அமெரிக்க கடேட் வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் 7ம் திகதி வரையில் இவர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ அகடமி, இராணுவத் தலைமையகம், இராணுவ எரிகணை தாக்குதல் பயிற்சிப் பாடசாலை ஆகியன உள்ளிட்ட சில முக்கிய இடங்களுக்கும் அமெரிக்க கெடட் வீரர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
(கோப்பு படம்)
Spread the love