முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் ராஜதந்திரிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் முஸ்லிம் மதவழிபாட்டுத் தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள், அவுஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, நோர்வே, தென் ஆபிரிக்கா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் ராஜதந்திரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். தெவட்டகஹா பள்ளிவாசலில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல எனவும், தாக்குதல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டித்துள்ளமை வரவேற்கப்பட வேண்டியது எனவும் ராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் உரிய முறையில் தண்டிக்க்பபட வேண்டுமென ராஜதந்திரிகள் வலியுறுத்தியுள்ளனர்.