நாடடில் அவசரகால நிலையை அறிவிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு சில நாடுகள் கோரியதாகத் தெரிவிததுள்ளார். எனினும் ஜனாதிபதி அதற்கு இணங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டிருந்தால் கூட்டு எதிர்க்கட்சியினர் அதனை தங்களது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியிருப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே சுமார் 19 நாடுகள் இலங்கையில் வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளினால் வழங்கப்பட்ட நிதி உதவிகள் பாதிக்கப்பட்ட வீடுகளை நிர்மானிக்க பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.