அனைத்து நாடுகளுடனும் நட்பு பாராட்டுவதே அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையாகும் என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களின் போது உலக நாடுகள் கருணையுடன் வழங்கிய கொடைகளுக்கும் உதவிகளுக்கும் நன்றி பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர் உடமைச் சேதங்களை கேள்வியுற்று இரங்கல் செய்திகளை அனுப்பி வைத்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவிததுள்ள அவர் இயற்கை சீற்றத்தின் பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதே மிகப் பெரும் சவாலாக காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு நாட்டுடனும் பகைமை பாராட்டாது அனைத்து நாடுகளுடனும் நட்புறவாக இருப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.