197
காவல்துறை திணைக்களத்தின் உயர் பதவிகளில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற மிக பாரிய காவல்துறை இடமாற்றம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர்கள் மூவர், ஒன்பது பிரதிக் காவல்துறை மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றி வந்த சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் ஐ.எச்.கே.டபிள்யூ. சில்வாவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பிரிவின் புதிய பொறுப்பாளராக பிரதிக் காவல்துறை மா அதிபர் எஸ்.சீ மெதவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love