262
நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில வெளிநாடு பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த மாதம் 12ம் திகதி முதல் 15ம் திகதி வரையில் வெளிநாட்டு பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்து லட்சம் ரூபா தனிப்பட்ட பிணையின் அடிப்படையில் உதய கம்மன்பிலவின் வெளிநாட்டு கடவுச்சீட்டை விடுவிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க உத்தரவிட்டுள்ளார்.
Spread the love