185
கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் குறைந்த வருமானத்தை கொண்ட நூறு மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ,மல்லாவி, பூநகரி, விசுவமடு பிரதேசங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மாணவா்களுக்கு புத்தக பை பயிற்சி கொப்பிகள் தண்ணீர் போத்தல், என்பவற்றோடு, காலணி கொள்வனவு செய்வதற்கு ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
கிளிநொச்சி இரணைமடு தாமரைத் தடாக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் பாடசாலைகளின் அதிபா்கள் ஆசிரியர்கள் மாணவா்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனா்.
Spread the love