கிளிநொச்சிக் கரைச்சி பிரதேச சபையின் பணியாளர்கள் தமது வரவினை உறுதிப்படுத்துவதற்காக பொருத்தி வைக்கப்பட்டிருந்த கைரேகை பதிவுக் கருவியைக் காணவில்லை என கரைச்சி பிரதேச சபைச் செயலாளர் கம்சனாதாசன் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளார்.
வியாழக்கிழமை மாலை வேலை முடிவடைந்து வீடு செல்லும் பொழுது பணியாளர்களால் வெளியேறுவதற்கான கைவிரல் அடையாளம் பதியப்பட்டது எனவும் வெள்ளிக்கிழமை காலையில் பார்க்கும் பொழுது அக் கருவியினைக் காணவில்லை எனவும் குறித்த முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்