168
வடக்கு மக்கள் தெற்கிற்கு நிவாரணங்களை வழங்கத் தயார் என மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இயற்கை அனர்த்தம் காரணமாக தெற்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வடக்கு தமிழ் மக்கள் ஆயத்தமாக இருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கென மக்கள் பொருட்களை திரட்டியுள்ளதாகவும் அந்தப் பொருட்கள் களுத்துறை வாழ் மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவத்துள்ளார்.
Spread the love