சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன பௌத்த சங்கம் 22 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று (03) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கையளித்தது.
சீன பௌத்த சங்கத்தின் தேரர்கள் இந்த நிதி அன்பளிப்பினை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வண. கல்லேல்லே சுமனசிறி தேரரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
சீன அரசாங்கமானது தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிவரும் இத்தகைய ஒத்துழைப்புக்களினால் இருநாட்டிற்கும் இடையிலான நீண்டகால தொடர்புகள் மேலும் விருத்தி அடைகின்றதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி இலங்கை அனர்த்தங்களை சந்திக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீன அரசாங்கம் உதவிகளை வழங்குவதையிட்டு தனது நன்றியைத் தெரிவித்தார்.