லண்டனில் நேற்றிரவு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரழந்தவர்களில் ஆறு பேர் பொதுமக்கள் எனவும் மூன்று பேர் சந்தேக நபர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
லண்டன் பிரிட்ஜ் மற்றும் ப்ரோக் சந்தை ஆகிய பகுதிகளில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வேகமாக சென்ற வாகனம் பாதசாரிகள் மீது மோதி தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் சென்று கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியள்ளனா்.
தாக்குதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் 48 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து லண்டன் பிரிட்ஜ் ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் தங்களுடைய உடலில் வெடிகுண்டுகளை கட்டியது போன்று தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் அவை போலியானவை என பின்னர் தெரியவந்து உள்ளது.
மேலும் லண்டனில் நடந்த இந்த தாக்குதல்களினைத் தொடர்ந்து பிரதமர் தெரேசா மே, அவசர பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்திற்கு உயர்மட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.