இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி இந்தியாவை துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தது. இதன்படி, களமிறங்கிய இந்திய அணி இன்னிங்ஸ் மழை காரணமாக பாதிக்கப்பட்டதனால் ஓவர்கள் வரையறுக்கப் பட்டிருந்தன.
இதனால் 48 ஓவர்களில் இந்திய அணி 319 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் ரோஹித் சர்மா 91 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 81 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட நிலையில் மீளவும் மழை காரணமாக போட்டிக்கு இடையீறு ஏற்பட்டது.
இதனால் 41 ஓவர்களில் 289 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி 33.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்களை மட்டுமே பாகிஸ்தான் அணி பெற்றுக்கொண்டுள்ளது.
இதில் அசர் அலி 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார். பந்து வீச்சில் உமேஸ் யாதேவ் 3 வி;க்கட்டுகளையும், ஹிர்த்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தனர். 32 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட யுவராஜ் சிங் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.