137
Police attend to an incident on London Bridge in London, Britain, June 3, 2017. Reuters / Hannah McKay TPX IMAGES OF THE DAY
- லண்டன் பிரிட்ஜில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
- தாக்குதல்தாரிகள் மூன்று பேரை போலிஸார் சுட்டுக் கொன்றனர்.
- இந்த தாக்குதலில் காயமடைந்த 48 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் அதில் 21 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
- நான்கு போலிஸார் காயமடைந்துள்ளனர்; அதில் இரண்டு பேர் தீவிரமாக காயமடைந்துள்ளனர்.
- எட்டு போலிஸ் அதிகாரிகள் 50 துப்பாக்கி குண்டுகளால் மூன்று தாக்குதல்தாரிகளை சுட்டனர்.
- அதில், பொதுமக்களில் ஒருவர் மீது குண்டு அடிப்பட்டு, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- லண்டனின் கிழக்கு பகுதியில் இருக்கும் பார்கிங்கில் சோதனை நடத்தி, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
- “இஸ்லாமியவாத தீவிரவாதத்தின் ஒற்றை சிந்தைனை” என இதை விவரித்துள்ள பிரிட்டன் பிரதமர் மே, “இதுவரை நடந்தது போதும்” என தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
- பிரிட்டன் “பயங்கரவாதத்திற்கு எதிராக மலிவாக செயல்படாது” என எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோபின் தெரிவித்துள்ளார்.
- தாக்குதல்தாரிகளில் ஒருவர் பார்கிங்கில் வசித்து வந்ததாக நம்பப்படுகிறது. அவர் வீட்டிற்கு அருகாமையில் இருந்தவர்கள், அவருக்கு திருமணமாகி இருண்டு குழந்தைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
- லண்டன் பிரிட்ஜை சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன அதில் சிலவற்றை போலிஸார், திங்களன்று காலை திறக்கலாம் என்று நம்பப்படுகிறது.
Spread the love