Home உலகம் லண்டன் தாக்குதலும் அது குறித்த தகவல்களும்:-

லண்டன் தாக்குதலும் அது குறித்த தகவல்களும்:-

by admin
Police attend to an incident on London Bridge in London, Britain, June 3, 2017. Reuters / Hannah McKay TPX IMAGES OF THE DAY
  • லண்டன் பிரிட்ஜில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
  • தாக்குதல்தாரிகள் மூன்று பேரை போலிஸார் சுட்டுக் கொன்றனர்.
  • இந்த தாக்குதலில் காயமடைந்த 48 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் அதில் 21 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
  • நான்கு போலிஸார் காயமடைந்துள்ளனர்; அதில் இரண்டு பேர் தீவிரமாக காயமடைந்துள்ளனர்.
  • எட்டு போலிஸ் அதிகாரிகள் 50 துப்பாக்கி குண்டுகளால் மூன்று தாக்குதல்தாரிகளை சுட்டனர்.
  • அதில், பொதுமக்களில் ஒருவர் மீது குண்டு அடிப்பட்டு, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • லண்டனின் கிழக்கு பகுதியில் இருக்கும் பார்கிங்கில் சோதனை நடத்தி, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
  • “இஸ்லாமியவாத தீவிரவாதத்தின் ஒற்றை சிந்தைனை” என இதை விவரித்துள்ள பிரிட்டன் பிரதமர் மே, “இதுவரை நடந்தது போதும்” என தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
  • பிரிட்டன் “பயங்கரவாதத்திற்கு எதிராக மலிவாக செயல்படாது” என எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோபின் தெரிவித்துள்ளார்.
  • தாக்குதல்தாரிகளில் ஒருவர் பார்கிங்கில் வசித்து வந்ததாக நம்பப்படுகிறது. அவர் வீட்டிற்கு அருகாமையில் இருந்தவர்கள், அவருக்கு திருமணமாகி இருண்டு குழந்தைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
  • லண்டன் பிரிட்ஜை சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன அதில் சிலவற்றை போலிஸார், திங்களன்று காலை திறக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More