ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படை முகாம் மீது தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று அதகாலை இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் 4 பேர் சம்பல் பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதனைத் தொடர்ந்து இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்கொலைத் தாக்குதல் நடத்த முயற்சி செய்த தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர் எனவும் அவர்களிடமிருந்து அதிகளவில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.