வீடமைப்பு அமைச்சு, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, புனர்வாழ்வு புனரமைப்பு இப்படி வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்கின்ற எந்தப் பிரிவாக இருந்தாலும், வீடமைப்புத் திட்டம் என்று வருகின்றபோது கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கின்றதென கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளர்h.
‘செமட்ட செவன’ எனும் ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஏறாவூர் ஸக்காத் கிராமத்தில் 36 வீடகளை நிருமாணிப்பதற்கான அடிக்கல்லை ஞாயிற்றுக்கிழமை (04.06.2017) நாட்டி வைத்த பின் பயனாளிகள் மத்தியில் அவர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கிலே எத்தனையோ பாரிய வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேளையிலே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு குடியிருக்க ஒரு வீடு கிடைக்கும் என்ற அவர்களது கனவை நனவாக்க முடியாமல் புறக்கணிப்புக்கள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
விகிதாரசாரப்படி இந்த புறக்கணிப்புக்கள் இடம்பெற்றிருப்பதை தான் நேரடியாக வீடமைப்பு அமைச்சர் சஜித் பிறேமதாஸாவிடமும் மீள் குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதனிடமும் சுட்டிக் காட்டியுள்ளதாகவும் அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டு இனி வரும் காலங்களில் அமுல்படுத்தப்படவிருக்கின்ற வீடமைப்பு வேலைத் திட்டங்களில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படாத அளவுக்கு தாம் கரிசனை காட்டுவதாக வாக்குறுதி அளித்திருக்கின்றார்கள எனவும் தெரிவித்தார்.
மேலும் தமிழ் முஸ்லிம் சிங்களம் என்ற பேதமில்லாமல் உரியவர்களின் காணி அவர்களிடம் உரிய முறைப்படி பெற்றுக் கொடுக்க உறுதி பூண்டுள்ளதாகவும் காணிகளைக் கையகப் படுத்தி வைத்திருக்கின்றவர்களின் பட்டியல் தம்மிடம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிவித்தார்.
அத்துடன் காணிக் கொள்கையைக் கையாவள்வதில் 13வது அரசியல் திருத்தத்தில் சொல்லப்பட்ட விடயங்களை அமுலாக்காமல் அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.