166
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் பிரித்தானிய வீரர் அண்டி மரே காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுக்கொண்டுள்ளார். ரஸ்ய வீரர் கரேன் காச்சனோவ் ( Karen Khachanov) வை வீழ்த்தி மரே காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுக்கொண்டுள்ளார். உலக டென்னிஸ் தர வரிசையில் முதனிலை வகி;க்கும் மரே 6-3இ 6-4 இ6-4 என்ற செற் கணக்கில் கரேன் காச்சனோவ்வை தோற்கடித்துள்ளார்.
உலக டென்னிஸ் தர வரிசையில் எட்டாம் இடத்தை வகிக்கும் ஜப்பானின் கெய் நிசிகோரி ( Kei Nishikori ) உடன் அண்டி மரே மோத உள்ளார். இதேவேளை லண்டன் மற்றும் மான்செஸ்டர் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக மரே இரங்கல் வெளியிட்டுள்ளார்.
Spread the love