காங்கேசன்துறை சீமெந்து உற்பத்திசாலை இயந்திர சாதனங்கள் பழைய இரும்பாக விற்கப்பட்டமை குறித்து முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
பாரிய நிதிமோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணைகளுக்காக இன்றைய தினம் ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலயாகுமாறு தயா ரட்நாயக்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட சில முன்னாள் படையதிகாரிகளிடம் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இவ்வாறு இயந்திர சாதனங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பழைய இரும்பாக எடைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதனால் பல கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.