பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை ஏன் காவல்துறையினர் கைது செய்யவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் ஞானசார தேரருக்கு தொடர்பு இருப்பது தெளிவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை ஞானசார தேரருடன் ஒப்பீடு செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஸ்வரன் கூறுவது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற போதிலும் அவர் சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்துமாறு கோரியதில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனினும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துமாறு ஞானசார தேரர் மக்களை தூண்டுவதாகத் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரை கைது செய்யுமாறு உத்தரவிடப்படடுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.