Home இலங்கைதிருமுருகன் காந்தியின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்

திருமுருகன் காந்தியின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்

by admin

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நாளை நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்தில் அனைவரும் அணிதிரள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் தமிழ் மக்களுக்கான நீதிக்காக தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பவர்களில் திருமுருகன் காந்தி முக்கியமானவர் என்று கூறியுள்ள கஜேந்திரகுமார் ஈழத் தமிழர்களுக்காக ஓய்வுறக்கமின்றி போராடியவர்களில் ஒருவரான திருமுருகன் காந்தியின் விடுதலைக்காக குரல் கொடுப்பது எமது கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழ் மக்களின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நினைவேந்தலை சென்னை மெரீனாவில் நடத்தியமைக்காக குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட திருமுருகன் காந்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More