213
எதிர்வரும் 2020ம் ஆண்டு முதல் இலங்கையில் புகையிலைச் செய்கை தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முழுமையாக புகையிலை பயிர்ச் செய்கை தடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புகையிலை உற்பத்திகளினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை தடுக்கும் நோக்கில் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Spread the love