159
இஸ்லாமிய தீவிரவாதிகள் பின்வாங்கியுள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸின் தென்பகுதி நகரான மராவியில் இவ்வாறு தீவிரவாதிகள் பின்வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில தீவிரவாதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் இந்த தீவிரவாதிகள் மலேசியா, இந்தோனேசியா, இந்தியா, சவூதி அரேபியா, மொரக்கோ மற்றும் செச்னியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாகவும் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரச படையினர் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருவதாகவும் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக பின்வாங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love