இலங்கையில் 51 ஆயிரம் சிறுவர் சிறுமியர் ஒருநாள் கூட பாடசாலைக்கு சென்றதில்லை என தெரிவிக்கப்படுகிறது. 5 வயது முதல் 17 வயது வரையிலான 51 ஆயிரம் சிறுவர் சிறுமியர் இவ்வாறு ஒருநாள் கூட பாடசாலைக்கு சென்றதில்லை என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தொழில் உறவுகள் அமைச்சின் கோரிக்கைக்கு அமைய புள்ளிவிபரவியல் திணைக்களம் நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2016ம் ஆண்டு முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஒருநாள் கூட பாடசாலைக்கு செல்லாத சிறுவர் சிறுமியர் அதிகளவில் கிராமங்களில் வாழ்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வறுமை ,நோய்கள் மற்றும் ஊனமுற்ற நிலை காரணமாக அவர்கள் பாடசாலை செல்வதை தவிர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெற்றோர்களுக்கு கல்வி மீது போதிய ஆர்வம் இல்லாத காரணத்தாலும் சில சிறுவர்கள் பாடசாலை செல்ல வேண்டிய வயதில் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைகளுக்கு செல்ல வேண்டியிருப்பதனாலும் பாடசாலை செல்வதை தவிர்த்து வருவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது