203
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமகள் குறித்து இன்றைய தினம் பாராளுமன்றில் அவை ஒத்தி வைப்பு விவாதம் நடத்தப்பட உள்ளது. ஜே.வி.பி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு விவாதம் நடத்தப்பட உள்ளது. இன்றைய தினம் முற்பகல் இந்த விவாதம் பாராளுமன்றில் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 13ஆயிரம் பேர் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகளவானவர்கள் ரத்தினபுரி மாவட்டத்தில் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Spread the love