Home இலங்கை நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி சீனியின் விலையை உயர்த்த முடியாது

நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி சீனியின் விலையை உயர்த்த முடியாது

by admin

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அனுமதியின்றி சீனியின் விலையை உயர்த்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அமைய வெள்ளைச் சீனி ஓர் அத்தியாவசிய பண்டம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே விலையை உயர்த்த வேண்டுமாயின் அதிகாரசபையிடமிருந்து எழுத்து மூலம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளைச் சீனி இறக்குமதிக்கான வரி கிலோ ஒன்றுக்கு பத்து ரூபா என்ற அடிப்படையில் அண்மையில் உயர்த்தப்பட்டிருந்ததனைத்  தொடர்ந்து தேனீரின் விலைகள் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அனுமதியின்றி சீனியின் விலையை உயர்த்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More