இலங்கை

அரசியல் அடிப்படையில் ராஜதந்திர பதவிகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு:-


அரசியல் அடிப்படையில் ராஜதந்திர பதவிகள் வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மற்றுமொரு வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் ராஜதந்திர பதவிகள் அரசியல்  அடிப்படையில் வழங்கப்பட்டதாக விமர்சனம் செய்த நல்லாட்சி அரசாங்கம் தற்போது அதே வழியைப் பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, முன்னாள் அமைச்சர் ஆதாவுத செனவிரட்னவின் புதல்வர் புத்தி ஆதாவுத ஆகியோருக்கு தூதுவர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் இவர்கள் அரசியல் அடிப்படையில் ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இலங்கைத் தூதுவர்களாக இவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டள்ளது. தொழில்முறை சாராதவர்கள் அதிகளவில் ராஜதந்திர சேவையில் பதவிகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply