ரஸ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி ( Alexei Navalny) க்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவின் பேரணிகள் சட்டத்தை மீறிச் செயற்பட்டமைக்காக இவ்வாறு நீதிமன்றில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
30 நாட்கள் நிர்வாக தடுப்புக் காவலில் எதிர்க்கட்சித் தலைரை வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிக்கடி பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடத்துவது குறித்த சட்டத்தை மீறி போராட்டங்கள், பேரணிகளை நடத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊழல் மோசடிகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய போது எதிர்க்கட்சித் தலைவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்திருந்தனர். மொஸ்கோ நீதிமன்றத்தினால் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிரான தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ரஸ்யாவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அலெக்ஸி நவால்னி போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.