201
வெளிநாட்டுக்கு தங்கம் கடத்த முயற்சித்த விமானப்படை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என இலங்கை விமானப்படை ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
பல கோடி ரூபா பெறுமதியுடைய தங்கம் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றி வரும் உத்தியோகத்தரே இவ்வாறு தங்கம் கடத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love