172
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ள துறைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ரவி கருணாநாயக்கவிற்கு துறைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் சுதந்திரக் கட்சி இந்த நடவடிக்கையை எதிர்ப்பதாகவும், ஜனாதிபதியும் இதனை எதிர்ப்பார் எனவும் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக சில முக்கிய துறைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love