இலங்கைக்கு பயணம் செய்யுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் சில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்படுத்துவது குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி, அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரதிநிதி, பயங்கரவாத எதிர்ப்பு குறித்த பிரதிநிதி உள்ளிட்டவர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் குறித்த விசேட பிரதிநிதியினால் இலங்கை குறித்து சமர்ப்பிக்கப்பட்ட விசேட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தற்போதைய அரசாங்கம் ஆக்கபூர்வமான அடிப்படையில் உறவுகளை பேணி பலப்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.