270
லக்ஸ்மன் யாபா அபேவர்தனவின் புதல்வருக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த வழக்கு ஒன்று தொடர்பில் இவ்வாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் புதல்வர் ஒசந்த யாபா அபேவர்தனவிற்கு எதிராகவே இவ்வாறு பிடிவிராந்து உத்தரவு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலதிக நீதவான் சன்தன கலங்சூரிய இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
நெலும்பொக்குனவிற்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பில் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love