241
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு எதிராக ஞானசார தேரர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தமது சட்டத்தரணிகளின் ஊடாக ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
ஞானசார தேரர் தற்போது தலைமறைவாக வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரின் உத்தரவினை மீறியதாகவும் வேறும் பல குற்றச்சாட்டுக்கள் காரணமாகவும் ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானசார தேரர், நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love