210
காலஞ்சென்ற கல்கெவல கெதர சந்ராவதி அம்மையார், திருமதி. இந்திராணி த கொஸ்தா மற்றும் திருமதி. கமலா த கொஸ்தா ஆகியோருக்கு சொந்தமான தெஹிவல, களுபோவில, வைத்தியசாலை வீதி, இலக்கம் 205 எனும் முகவரியில் அமைந்துள்ள சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான 40 பர்ச்சஸ் காணி களுபோவில போதனா மருத்துவமனைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான உறுதிப் பத்திரம் இந்திராணி த கொஸ்தா மற்றும் கமலா த கொஸ்தா ஆகியோரால் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி அதனை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளித்தார்.
Spread the love