அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்றையதினம் நடைபெறவுள்ளது. லண்டன் சென் போல் கத்தரல் ( St Paul’s Cathedral ) இல் இந்த நினைவஞ்சலி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த யூன் 14ம் திகதி இடம்பெற்ற இந்த தீவிபத்தில் சுமார் 80 பேர் உயிரிழந்த நிலையில் இந்த தேசிய நினைவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த தீவிபத்ததானது பல்வேறு விமர்சனங்களுக்குட்பட்ட நிலையில் இது தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறி;ப்பிடத்தக்கது
இணைப்பு6 – லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தின் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம் : 14.06.17
லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கட்டிடத்துக்குள் பலர் சிக்கியதாக கருதப்படுவதாலஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குறைந்தது எழுபத்தி நான்குபேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் இருபது பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கட்டிடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்ற நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இணைப்பு4 – லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் தீவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு
Jun 14, 2017 @ 11:36
லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில்; 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த தீ விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக லண்டன் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
இணைப்பு3 – லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம்
Jun 14, 2017 @ 09:08
லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்திருப்பதாக லண்டன் தீயணைப்பு ஆணையாளர் டேனி காட்டன் தெரிவித்துள்ளார். எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தீ விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக லண்டன் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
அந்த கட்டிடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிகிச்சை பெறும் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் தவிர மீதமுள்ளவர்களில் எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனைபேர் அங்கு சிக்கியிருக்கலாம் அல்லது பலியாகியிருக்கக்கூடும் என்கிற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்
2ஆம் இணைப்பு – லண்டனில் அடுக்கு மாடி கட்டடமொன்றில் பாரிய தீ – 30 பேர் 5 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்:-
Jun 14, 2017 @ 04:08
லண்டனில் அடுக்கு மாடி கட்டமொன்றில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. மேற்கு லண்டனின் லடிமிர் வீதியில் அமைந்துள்ள கட்டமொன்றில் இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் பெரும் எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். பிந்திய தகவல்களின் அடிப்படையில் 30 பேர் மீட்கப்பட்டு 5 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Grenfell Tower என்ற பல மாடிகளைக் கொண்ட கட்டடமே விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், சுமார் 200 தீயணைப்புப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 40 தீயணைக்கும் இயந்திரங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக லண்டன் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்த கட்டடமும் தீ பற்றிக் கொண்டுள்ளதனால் கட்டடம் இடிந்து வீழக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்தினால் குறித்த பகுதி முழுவதிலும் சாம்பல் பரவியுள்ளதாகவும் புகை மண்டலமாக காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் உயிர்ச் சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டதா என்பது பற்றிய விபரங்கள் இன்னமும் துல்லியமாக வெளியிடப்படவில்லை என்பதுடன், விபத்துக்கான காரணங்களும் இதுவரையில் வெளியாகவில்லை.