ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் புதிதாக பணியாளர்கள் நியமிக்க்பபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் பற்றி கூறப்பட்டுள்ளது. விமான சேவையின் அதிகாரிகள் நிறுவனத்தை லாபமீட்டக்கூடிய வகையில் வழிநடத்தத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சில நடவடிக்கைகளின் காரணமாக சுமார் 22 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தை லாபமீட்டச் செய்யும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்ட போதிலும் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை எனவும்; தெரிவிக்கப்படுகிறது.