மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் போது 1.6 பில்லியன் ரூபா நட்டத்தை தவிர்த்திருக்கலாம் என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் அதிகாரிகளது கவனயீனமே இந்த நட்டத்திற்கான காரணம் என தெரிவித்துள்ள அவர் உரிய முறையில் பணிகளை மேற்கொண்டிருந்தால் இந்த 1.6 பில்லியன் ரூபா நட்டத்தை தவிர்த்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி மற்றும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதிகளில் பிணை முறி விநியோகம் செய்யப்பட்டிருந்தது.