இன மற்றும் மத முரண்பாடுகளை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபட அனுமதியளிக்கப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எந்தவொரு இனத்திற்கும் மதத்திற்கும் எதிராக வன்முறைகளைத் தூண்டும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அஞ்சப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன சமூகம் ஒன்றுக்கு எதிராக குரோத உணர்வைத் தூண்டும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தாம் இலங்கையர் என்ற ரீதியில் பெருமை கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்தள்ளார்.