இலங்கை

லண்டன் தீ விபத்துக்கு இலங்கை இரங்கல்


லண்டனில் இடம்பெற்ற பாரிய தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இரங்கல் வெளியிட்டுள்ளது. மேற்கு லண்டனில் நேற்றைய தினம் 27 மாடிகளைக் கொண்ட பாரிய அடுக்கு  மாடி குடியிருப்புத் தொகுதிக் கட்டமொன்று தீ விபத்துக்கு உள்ளானதில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தனர்.

இந்த தீ விபத்துச் சம்பவம் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இலங்கை வாழ் மக்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் வெளியிட்டுக் கொள்வதாகவும், காயங்களக்கு உள்ளானவர்கள் விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்தனை செய்வதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவத்தில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் 08000961233 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என லண்டன் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கையர்கள்

Mr. Priyanka Fernando, Minister Counsellor          Mobile: 074 66779693

Mr. Vithurson Vincendrarajan, Third Secretary       Mobile: 07538200462

ஆகிய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.