நானுஓயா பிரதேசத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. லொறியொன்று சிறுமி ஒருவரை மோதி விபத்துக்குள்ளானதன் காரணமாக இவ்வாறு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாதசாரிகள் கடவையில் வைத்து குறித்த சிறுமியை வாகனம் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துடன் தொடர்புடைய லொறிக்கு பிரதேச மக்கள் தீ வைத்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 7.25 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தினால் சிறுமி உயிரிழந்துள்ளார் எனவும் இதனால் பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் முன்னெடுத்த போராட்டத்தினால் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.