தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் கபில ஹெந்தாவிதாரன இன்றைய தினமும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினமும் மேஜர் கபில ஹெந்தா விதாரன நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 3.2 மில்லியன் ரூபா பணத்தை பல்வேறு வங்கிகளின் ஊடாக இலங்கை வங்கிக் கிளையில் காணப்படும் சேமிப்புக் கணக்கில் வைப்பில் இட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு கிழக்கில் இயங்கி வரும் கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று மற்றும் சில நிறுவனங்களிடம் மேஜர் கபில ஹெந்தாவிதாரன பணம் பெற்றுக்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.