உலகம்

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக உயர்வு

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக உயர்வடைந்துள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். அத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 30 பேரில் 17 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் எரிந்து கொண்டிருக்கும்  கட்டிடத்தின்  இடிபாடுகளுக்குள்  யாரும் உயிரோடு சிக்கிக்கொண்டிருக்க வாய்ப்பில்லை என தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
அத்துடன் இன்னும் அதற்குள் மக்கள் இருக்கிறார்களா  என்பதனை அறிவதற்காக  மோப்ப நாய்கள் அனுப்பப்படவுள்ளதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கட்டடத்தில் தீ பற்றியது குறித்து  கேள்வி எழுந்துள்ளதால், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பிரதர் தெரீசா மே, இதுபற்றி முழு விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply