184
வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக ஆளும் கட்சி உறுப்பினர் 15 பேர் கையொப்பம் இட்டு சத்திய கடதாசியுடன் வடமாகாண ஆளூநரிடம் கடிதம் ஒன்றினை கையளித்துள்ளனர்.
வடமாகாண ஆளூநரின் வாசஸ்தலத்திற்கு இன்று வியாழக்கிழமை இரவு 9.45 மணியளவில் ஆளூநரை மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம் மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் சந்தித்து கடிதத்தினை கையளித்துள்ளனர்.
அக் கடிதத்தில் மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள தமிழரசு கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்களாக 15 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
குறித்த கடிதத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம் , எம்.தியாகராசா , ஜி. குணசீலன் , ஆர். இந்திர ராஜா, து.ரவிகரன் , கே.சிவநேசன், அனந்தி சசிதரன், க.சர்வேஸ்வரன், பொ.ஐங்கரநேசன் , விந்தன் கணகரட்னம் , ஏ.புவனேஸ்வரன் , செ.மயூரன் , ஜி.ரி.லிங்கநாதன், ப.கஜதீபன் ,சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
குறித்த கடிதத்தை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில் ,
எமக்கு முதலமைச்சர் மீது நம்பிக்கையுள்ளது. சபை அமர்வை கூட்டி முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்க கோரினால் , வாக்கெடுப்பில் நாமே வெற்றி பெறுவோம். அந்த வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக அமையும் என தெரிவித்தார்.
Spread the love