சர்வதேச கிரிக்கட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுக்கொண்டுள்ளது. பங்களாதேஸ் அணியுடன் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 9 விக்கட்டுகளினால் அபார வெற்றியீட்டி இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணி, பங்களாதேஸ் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி களமிறங்கிய பங்களாதேஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் தமீம் இக்பால் 70 ஓட்டங்களையும், முஸ்பிகுர் ரஹீம் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் இந்திய அணியின் சார்பில் யாதேவ், புவனேஸ்வர்குமார் மற்றும் பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 40.1 ஓவர்களில் 265 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது 123 ஓட்டங்களையும், அணித் தலைவர் விராட் கொஹ்லி ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.