212
கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலக தமிழ்ச் சங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட குறித்த சிலையே கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விஜிபியின் தலைவர் பேராசிரியர் விஜி சந்தோசம் அவர்களினால் இன்று(17) பிற்பகல் மூன்று மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் வாழ் தலைவர் இறைபிள்ளை வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் மற்றும் தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள் அறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Spread the love