குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்தியாவில் இருந்து படகுமூலம் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 248கிலோ கிராம் கேரள கஞ்சா கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பகுதியில் வைத்து கார் ஒன்றுக்கு (17)மாற்றும் பொழுது இன்று அதிகாலை பூநகரிப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது
படகுமூலம் வந்தவர்களும் காரில் வந்தவர்களும் தப்பி ஓடிய நிலையில் தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் கார் உட்;பட 248 கிலோ கேரள கஞ்சா மீட்ட்கப்பட்டுள்ளது பின்னர் குறித்த சந்தேக நபரை விசாரணைக்கு உட்ப்படுத்திய பொழுது யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மேலும் பன்னிரண்டு கிலோ கேரள கஞ்சா இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது
பிரதான சந்தேக நபர்கள் யாரும் கைதுசெய்யப்படாத நிலையில் மேலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. அத்துடன் விசாரணைகளின் பின் சந்தேகநபர் மற்றும் சான்றுப் பொருட்கள் என்பன எதிர்வரும் திங்கட் கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பட உள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்