குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது. அலரி மாளிகையில் இந்த விசேடக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அரசியல் சாசனம், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஆகியன தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
பௌத்த மதத்திற்கான முன்னுரிமை, நாட்டின் ஒருமைப்பாடு, மாகாண ஆளுனர்களுக்கான அதிகாரங்கள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் இரண்டு கட்சிகளும் தமது நிலைப்பாட்டை வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.