151
தேசியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி கபில ஹெந்தாவித்தாரன நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை ஆகியுள்ளார். மூன்றாவது தடவையாக இன்றைய தினம் அவர் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் தேசியப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கபில ஹெந்தாவிதாரன கடமையாற்றியிரந்தார். குறித்த காலப் பகுதியில் வடக்கு கிழக்கில் இயங்கி வந்த கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிலிருந்தும் ஏனயை நிறுவனங்கள் சிலவற்றிலிருந்தும் பணம் பெற்றுக்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love