173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண ஆளுனரிடம் எங்களது உறுப்பினர்களால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீள பெறுவது தொடர்பில் ஆளுனருடன் பேச இருப்பதாக தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று மதியம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண முதலமைச்சருக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில் ஏற்பட்டு உள்ள சமரசம் ஏற்பட்டு உள்ளது அந்த சமரசத்தில் ஏற்பட்டு உள்ள வேண்டுகோள்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் , மாகாண சபை உறுப்பினர்களுடன் ஆராய்ந்தேன்.
அவர்கள் அனைவரும் அந்த சமரசத்தை ஏற்றுக்கொண்டு உள்ளார்கள் இந்த சமரசத்தின் பிரகாரம் வடமாகாண ஆளுனரிடம் எங்களது உறுப்பினர்களால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீள பெறுவது தொடர்பில் ஆளுனருடன் பேச இருக்கின்றோம்.
அவைத்தலைவர் தொடர்பில் பிரச்சனையில்லை.
அதேவேளை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தொடர்ந்து அவைத்தலைவராக நீடிப்பரா ? இல்லையா என்பது தொடர்பில் ஆராயவில்லை அது ஒரு பிரச்சனையாக யாரும் எங்களுக்கு சொல்லவில்லை.
கல்வி அமைச்சர் இராஜினமா செய்வார்.
கல்வி அமைச்சர் த. குருகுலராஜாவும் தனது பதவியினை இராஜினாமா செய்வார் என நினைக்கிறேன். என மேலும் தெரிவித்தார்.
Spread the love