குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் முஸ்லிம் கடும்போக்குவாதம் ஏற்பட்டுள்ளதனை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டுமென பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கொழும்பில் அந்த இயக்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கில் பௌத்த தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அழிக்கப்படுவதாகவும், நாட்டில் முஸ்லிம் கடும்போக்குவாதம் நிலவி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த விடயங்களை தற்போதைய அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதிகளும் ஒப்புக்கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.
2020ம் ஆண்டில் தேர்தலில் வெற்றியீட்ட வேண்டும் என்ற காரணத்தினால் எந்தவொரு அரசியல் தலைவரும் இது குறித்து பேசப்போவதில்லை எனவும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை இழக்க அவர்கள் தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளது.
சம்பிக்க ரணவக்க, அதுரலிய ரதன தேரர் போன்றவர்கள் பாராளுமன்றில் இது குறித்து உரையாற்றினால் ஞானசார தேரர், முஸ்லிம்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது எனவும் பொதுபலசேனா தெரிவித்துள்ளது.