183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தம்மை, வெள்ளை வானில் கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளில் திருப்தி கொள்ள முடியாது என சிரேஸ்ட ஊடகவியலாளர் போத்தல ஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் போத்தல ஜயந்த நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப்பிரிவில் மீளவும் முறைப்பாடு செய்துள்ளார். 2009ம் ஆண்டு ஜூன் மாதம் போத்தல ஜயந்த வெள்ளை வானில் கடத்தப்பட்டு தாக்குப்பட்டிருந்ததனைத் தொடர்ந்து 2010ம் ஆண்டில் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
இந்தநிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தாம் இவ்வாறு முறைப்பாடு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love